இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள அனுபவங்கள் என் வாழ்வில் நன் பெற்ற அனுபவங்களே இதில் சில நான் சிலரை பார்த்து பெற்ற அனுவங்கள்... இவைகள் உங்களுக்கு பயன் தரும் என்று நன் நம்புகிறேன்... உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை வாழக்கை படமாக ஏற்று வாழ்வும்...
அனுபவங்கள் வெறும் அழகு வார்த்தைகள் அல்ல இவை வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என நமக்கு கற்றுத் தருகிறது. அதுமட்டுமில்லாமல் நாம் வாழ்க்கையில் செய்யக்கூடிய சில தவறுகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ளவும் செய்த தவறுகளை திருத்திக் கொள்ளவும் உதவும் பொன் மொழிகள் ஆகும்…
ஒரு பழமொழி ஆயிரம் அனுபவத்திற்கு சமம்.. ஒரு அனுபவ மொழி ஆயிரம் செயலுக்கு சமம். ஒரு நல்ல செயல் ஆயிரம் தவறான செயல்களில் இருந்து பிறக்கும்.
முதலில் சுயமாக முடிவை எடுக்க கற்றுக்கொள், முதலில் உன் முடிவு தவறானதாகவே இருக்கும் அதை விரைந்து திருத்திக்கொள்... உன் முடிவை செயலாக்க மீண்டும் மீண்டும் முயற்சி செய், உன் முயற்சி தோல்வியை தரலாம் அந்தத் தோல்வியே அனுபவம். ஒருமுறை நீ அனுபவம் பெற்றுவிட்டால் உன் முடிவு நல்ல முடிவாகவே இருக்கும் உன் செயல் நல்ல செயலாகவே இருக்கும் உன் செயல் உனக்கு வெற்றியைத் தரும்…
வெற்றி பெறுவது என்பது பல தோல்விக்குப் பின் கிடைக்கும் பரிசு, கிடைக்கும் பரிசு நிரந்தரமற்றது ஆனால் கிடைக்கும் பரிசை எவ்வளவு நாள் நீ தன் வசப்படுத்துகிறாய் என்பதை பொறுத்தே உன் திறமையும் அறிவும் உள்ளது… கிடைக்கும் வெற்றியை தக்க வைத்துக்கொள்...
வாழ்க்கை என்பது ஒரு முறைதான் அதை உன் முடிவுகள் மூலம் நீயே எழுதுகிறாய் அதாவது உன் தலைவிதியை உன் முடிவுகள் என்ற எழுதுகோலை பயன்படுத்தி நீயே எழுதுகிறாய்…
கடவுள் உண்டோ இல்லையோ ஆனால் உனக்கு மனம் உண்டு. அந்த மனம் கூறும் நல்ல எண்ணங்களை உன் வாழ்க்கை…
கல்வி என்பது எண்ணங்களை நெறிமுறை படுத்தும் ஒரு கருவியே… அந்த கருவியை கவனமாக தேர்வு செய்து கற்க வேண்டும்…
ஏன், எங்கே, எப்படி, எவ்வாறு, எதனால் என்று கேள்வி கேட்பதில் தான் கல்வியின் பிறப்பிடம் உள்ளது… இதன் மூலம் மனதில் எழும் சந்தேகத்தை நீக்கலாம்…
உன் எண்ணமே உன் வாழ்க்கை… எண்ணம் நல்லவை என்றால் நல்லவனாக வாழலாம் அல்லது தீய எண்ணங்களை விட்டாலும் நல்லவனாக வாழலாம்…
ஓர் புத்தகம் பல அனுபவ குறிப்புகளை தருவது ஆகும்…
இறப்புக்கு பின் என்ன ஆகும் என்பதை எண்ணி வருந்தாமல் இருக்கும்போது என்ன செய்யலாம் என்பதை யோசித்து நடக்கலாம்…
வாழ்க்கையில் நிகழ்காலம் கடந்தகாலம் எதிர்காலம் இம்மூன்று காலங்களில் சிறந்தது நிகழ்காலம் ஏனெனில் அது மட்டுமே கையில்.. கடந்த காலத்தை மாற்றவும் முடியாது எதிர்காலத்தை தீர்மானிக்கவும் முடியாது….
உன்னுடைய வாழ்க்கை என்பதே நிகழ்கால அனுபவத்தை வைத்து நீ வாழ்வதே ஆகும்..
வாழ்க்கை உனக்கு ஒரு துறையில் ஒருமுறை மட்டுமே அனுபவத்தை தரும் அதை நீ சரியாக பயன்படுத்த வேண்டும்…
உன் அனுபவத்தை மற்றவருக்கு கற்றுத் தரவும் சொல்லவும் தயங்காதே ஏனெனில் நீ பெற்ற அனுபவம் பிறரால் உனக்கு தரப்பட்டது.
இந்த சமூகத்தில் நன்மை செய்ய தயங்காதே ஏனெனில் ஒரு நன்மை உனக்கு ஆயிரம் நன்மையை தரும்…
நெல்லும் விளையும் நீ சொன்ன சொல்லும் விளையும்… நெல்லுக்கும் விலையுண்டு நீ சொன்ன நல்ல சொல்லுக்கும் விலையுண்டு..
கடவுளிடம் கேட்க வேண்டிய வரம் பொது உடமை கொண்டதாக இருந்தால் பயன் உனக்கும் பலருக்கும் விரைவாக கிடைக்கும்…
வாழ்க்கை என்பது பணத்தை சம்பாதிக்க அல்ல… ஆனால் சிலர் பணத்தை சம்பாதிக்கவே இவ்வுலகில் வாழ்கிறார்கள்…
இவ்வுலகில் எளிமையானது என்னவென்றால் பணம் சம்பாதிப்பதே ஆகும். ஆனால் அந்த எளிமையான வழியை நீ அறிய வேண்டும்…
பணம் சில வழிகளில் வரும் பல வழிகளில் போகும்…
பணம் செலவு செய்யவே…
பணம் ஓர் இடத்தில் இருப்பதை விட ஓர் தொழிலில் அல்லது பொருளில் அல்லது சிலருக்காக செலவு செய்வதில் தவறில்லை…
பணம் பன்மடங்கு பெருகும் எப்போது என்றால் அதை நீ ஓர் இடத்தில் வைக்காமல் பல இடங்களில் முதலீடு செய்யும்போது…
உழைப்பை எறும்பிடம் கற்றுக்கொள் சேமிப்பை தேனியிடம் கற்றுக்கொள் பொறுமையை எருமை இடம் கற்றுக்கொள் நன்றியை நாயிடம் மழை இடம் கருணையை கற்றுக்கொள்…
பலரிடம் உள்ள சில நல்ல செயல்களை நாம் பின்பற்றுவது தவறில்லை…
நம்மிடம் பிறர் கற்க வேண்டியது நம்முடைய நல்ல செயல்களையும் அனுபவங்களையும் அறிவுகளையும் மட்டுமே…
நமக்கு ஒரு பிரச்சனையின் போது மூன்றாவது மனிதனாக இருந்து யோசித்து தீர்வை கண்டறிவது எளிமையானது…
அனுபவம் என்பது ஒரு செயலுக்கு நல்ல தீர்வை தருவதாகும்…
பிரச்சனையின் போது பதற்றப்படாமல் அறிவுடன் செயல்பட்டால் அதன் பாதிப்பு குறைவாக இருக்கும்…
இப்போதும் விழிப்புடன் இருப்பது முக்கியம் இல்லை ஆனால் பிரச்சனை வரும்போது நமக்கு எப்போது விழிப்பு அதாவது அதற்கான தீர்வு எவ்வளவு விரைவாக பெறுகிறோம் என்பதே முக்கியம்…
அறிவு என்பது எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் பேச வேண்டும் என்பதை உணர்வதே ஆகும்…
புத்திசாலித்தனம் என்பது ஒரு பிரச்சனைக்கு நல்ல தீர்வை கண்டறிவதே… அந்த நல்ல தீர்வை அந்த பிரச்சனைக்கு உரிய பல நல்ல தீவுகளில் இருந்து தேர்வு செய்வதே புத்திசாலித்தனம்…
முட்டாள் தனம் என்பது ஒரு முறை ஏமாற்றப்படுவது இல்லை மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுவதே ஆகும்…
செயல் என்பது மனதில் தோன்றுவதை செய்து மட்டுமே இல்லை மனதில் தோன்றுவதை ஆராய்ந்து அதில் சிறந்தது மட்டுமே செய்வது...
ஒரு செயலை எடுத்து நடந்தாலே போதும் அந்த செயலுக்கான பாதை தெரியும்…
துணிவே உன் பாதையை உனக்கு தெரியப்படுத்தும்…
துணிவு என்பது அவசரப்படுவது இல்லை ஒரு பாதையை நோக்கி விரைவாக செல்வதே…
இரவு என்பது இருட்டு மட்டும் இல்லை சில உயிர்க்கு அதுவே பகலும் கூட…
பகல் என்பது வெளிச்சம் மட்டும் இல்லை பலருக்கு அது தெளிவும் கூட…
தீக்குச்சியில் பலம் காட்டை இருக்கும் போதுதான் தெரியும் அதுபோல் உன் பலம் வீட்டில் இருக்கும் போது தெரியாது வெளியே வரும்போதுதான் தெரியும்….
வீட்டினுள் உன்னுடைய பலம் என்பது தீப்பெட்டிக்குள் இருக்கும் எரிந்த தீக்குச்சியின் பலம்…
பூமிக்கு இரவு பகல் என இரண்டு முகம் உண்டு ஆனால் எப்போதும் இரு முகத்தையும் ஒன்றாக பார்க்க முடியாது…
நீ நல்லது செய்ய வேண்டியது உன் எதிரிக்கு மட்டுமே ஏனெனில் உன் எதிரியால் மட்டுமே உன்னை அசைத்துப் பார்க்க முடியும். எதிரிக்கு நன்மை செய்வது அவனுக்கு பயந்து அல்ல நமக்கும் நம்மை சுற்றி உள்ளவர்க்கும் நமக்கு நாமே செய்யும் நன்மையாகும்…
காதல் என்பதே காமமும் இல்லை அன்பும் இல்லை பாசமும் இல்லை இளமையில் தோன்றும் உணர்வும் இல்லை கடவுளால் ஏற்படும் உணர்வும் இல்லை இவை அனைத்தும் கலந்தது…
குடும்பம் என்பது சமூகத்தில் ஓர் அந்தஸ்தை தருவது…
நீ உலகில் வாழ சிறந்த முறை குடும்ப வாழ்க்கை முறை…
உலகத்தை நீ வென்றிடலாம் குடும்பத்தில் உள்ளோர் உனக்கு ஆதரவாக இருந்தால் போதும்…
சில பிரச்சனைக்கு முடிவு எடுப்பதே தள்ளிப்போடுவது பிரச்சனைக்கு ஒரு முடிவாக இருக்கும்…
காலம் இவ்வுலகிலுள்ள அனைத்து கேள்விக்கும் பிரச்சனைக்கும் சரியான பதிலையும் தீர்வையும் தரும்…
காலம் கண் போன்றது அது மட்டும் இல்லை காலம் தன் கடமையை செய்யும் நீ காலத்தில் உன் கடமையை செய்…
மாற்றம் கூட இந்த உலகில் மாறக்கூடியது…
மாற்றத்தை எவ்வளவு கொடுத்தாலும் தடுக்க முடியாது. அது ஒரு நாள் மாறியே தீரும்…
அனுபவத்தில் சிறந்தது என்பது எத்தனை முறை நீ அதனை பயன் படுத்துகிறாய் என்பதே ஆகும்…
இவ்வுலகில் மிகவும் கொடியது பிறருடைய திறமையை மறைப்பதும் மறுப்பதும் மட்டுமே…
சிறந்த சோம்பேறித்தனம் என்பது உன் அறிவை பயன்படுத்தாமல் இருப்பதே ஆகும்…
காதலித்தால் போதும் உன் முகத்தில் நவரசத்தையும் காணலாம்…
இளமை என்பது இமை பொழுதில் சொல்லக் கூடியது அதில் ஒரு இமை பொழுதையும் வீணாக்காதே…
குழந்தை என்பது கடவுளின் மனதை பெற்றது ஆம் நானும் நீங்களும் கடவுளாய் இவ்வுலகில் இறக்கவும் ஆனால் நம்மால் கடவுளாய் இவ்வுலகில் வாழ முடிகிறதா…
சந்தேகம் பிறக்கும் போது உன் வாழ்க்கையை நீ வீணாக்குகிறாய் என்பதே ஆகும் அதன் விடை தெரிந்தபின் வாழ்க்கையே வீணாகிவிடும்…
கேள்வி வேறு சந்தேகம் வேறு குழப்பம் வேறு
அறிவியல் என்பது ஆராய்ச்சி முடிவில் கிடைக்கும் அனுபவமாகும்….
விவசாயியின் அனுபவம் விளைச்சலில் தெரியும் அரசியல்வாதியின் அனுபவம் பேச்சில் தெரியும் ஆசிரியரின் அனுபவம் விளக்கத்தில் தெரியும்…
சிறந்த கருவி பாதி வெற்றியைத் தரும் மீதி வெற்றியை உன் திறமை உனக்குத் தரும்…
பசிக்காகவும் தேவைக்காகவும் திருடுபவன் திருடன் இல்லை பிச்சை கேட்காமல் எடுப்பவன்…
திருடன் என்பவன் ஒருவருக்கு தேவை இல்லாதவை தேவை எனக்கூறி அவனிடம் கொடுப்பதே ஆகும் …
இவ்வுலகில் கதை ஏன் பிறந்ததோ அது ஒரு காதுக்கு காது பொய்களை ஏற்றிக்கொண்டு பெரிதாகி கொண்டே செல்கிறது…
உலகில் விழக்கூடாது போதைகள் காமம் ஆசையும்…
இவ்வுலகில் கேட்ட கதையை வதந்தியா என ஆராயாமல் பரப்பக்கூடாது…
இவ்வுலகில் வேகமாக பரவக்கூடியது வதந்தியே இதற்கு காதுகளை கால்கள் ஆகும்..
சூரியனாலும் கருமையை தரமுடியும் அது மறைவதனால்…
தேடுவதே பல பிரச்சனைக்கு அல்லது செயலுக்கு நல்ல தீர்வாக இருக்கும்…
பிரச்சனையாலும் சிலருக்கு நன்மையை செய்ய முடியும் அது கொடுக்கும் சில நல்ல முடிவுகளாலும் தீர்வுகளும்…
தேடி தேடி செல்வதே அனுபவத்தையும் நல்ல வாழ்க்கையையும் தரும்…
ஒரே ஒரு துறையில் அனுபவத்தை விட பல்துறை பல அனுபவமே சிறந்தது…
காலம் சொல்கிறது நீ என்னை எவ்வாறு பயன் படுத்துகிறாய் என்பதே உன் வாழ்க்கை என்று...
ஒருவரை அதிகம் நேசிக்கவும் கூடாது வெறுக்கவும் கூடாது ஏனெனில் அவர்களுக்குள் சில தீய குணங்களும் இருக்கும் சில நல்ல குணங்களும்
இருக்கும் நீங்கள் பிறரிடம் உள்ள நல்ல குணங்களை மட்டுமே பார்க்க வேண்டும் தீய குணங்கள் உள்ள மனிதர்களை வெறுக்க கூடாது அவர்களிடம் உள்ள தீய குணங்களை மட்டுமே வெறுக்க வேண்டும்....
எதிரியை எப்படி ஜெயிக்க வேண்டும் என்றால் எதிரியை அவன் உள்ள நிலையில் இருந்து கீழே இறக்கி அவனை ஜெயிக்க கூடாது அவ்வாறு செய்தால் நம் நிலையும் கீழே இருக்கும் அவனை மேல் நோக்கி ஏற வைத்து அவன் மேல் நிலையில் உள்ள போது நாமும் உழைத்து அவனை விட மேல் நிலையில் சென்று அவனை ஜெயிக்க வேண்டும்…
நாம் செய்யும் வேலை நமக்கு ஏதாவது ஒரு தொழிலையோ அல்லது அனுபவத்தையோ கற்றுத் தந்தால் அதுவே தான் உலகில் மிகச்சிறந்த வேலை என்பது எனது கருத்து...