- அழகியின் சிரிப்பை விட தாயின் கண்ணீரை வலிமையானது.
- கடவுள் தான் எங்கும் இருக்க முடியாது என்பதற்காகவே தாயைப் படைத்தார்………. யூதர்கள் பழமொழி
- உலகத்தில் ஒரே ஒரு பொருள்தான் மனைவியை விட சிறந்தது அது தன் தாய் தான்.
- தாயின் அன்பை கூற உலகத்தில் உள்ள எந்த மொழியிலும் போதிய வார்த்தைகள் இல்லை..
- அறிவு மிக்க ஒரு தாய் நூறு ஆசிரியர்களுக்கு சமம்…
- தாய்மை என்பது தான் பெண்களின் முக்கியமான அணிகலன் தாயின் இதயம் தான் குழந்தைகளின் பள்ளி….
- ஒரு சமுதாயத்தின் எதிர்காலமே தாய்மார்களிடம் தான் குடிபுகுந்து கொண்டிருக்கிறது பெண்களால் உலகம் அழியும் என்றால் அதை தடுத்து நிறுத்த ஒரு தாயால் மட்டுமே முடியும்…
- உலகத்திலுள்ள அனைத்தையும் ஒரு தட்டிலும் தாயை மற்றொரு தட்டிலும் வைத்தால் தட்டு தான் தாழ்ந்து இருக்கும்…
- இன்று நான் அடைந்துள்ளவைகளும் இனிமேல் அடையப் போகின்றவைகளும் தெய்வம் போன்ற என் தாய்க்கு சொந்தமாகும்…. ஆப்ரகாம் லிங்கன்
- தன்னை உணர்ந்த ஆத்ம ஞானிகள் இறந்தவர்களை பற்றியோ இருப்பவர்களை பற்றியோ கவலைப்படுவதில்லை…. பகவத் கீதை
- காலத்தை நம் கண்ணால் காணமுடியாது காதால் கேட்க முடியாது மூக்கால் நுகர முடியாது நாக்கால் சுவைக்க முடியாது கையால் தொட முடியாது…. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- காலம் உன் உயிர் போன்றது அதை வீணாக்குவது என்பது உன் உயிரை நீயே கொள்வது ஆகும்……..யாரோ
- ஒருவன் தன் மனதால் சினம் கொள்ளாமல் இருந்தால் அவன் நினைத்த நன்மைகளை எல்லாம் அடைவான்…
- சட்டத்திற்கும் ஒழுக்கத்திற்கும் நேர்மைக்கும் நாம் மதிப்பு கொடுத்து கீழ்ப்படிந்து நடந்தால் தான் நாம் முன்னேற முடியும்… தலைவர் காமராஜ்
- தனக்கு ஒன்றும் தெரியாது என்று எண்ணுப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு ஆனால் தனக்கு எல்லாம் தெரியும் என்று இருப்பவன் தான் முட்டாள்..
- மனச்சான்று நீதியாய் இருந்து தண்டனை தரும் உன் தள்ளி இருந்து எச்சரிக்கை செய்யும்…..
- பகைவனை மன்னிக்காதவன் உலகில் அடையக் கூடிய உயர்ந்த இன்பத்தை இன்னும் அறியாதவனே…
- எல்லா மனிதர்களையும் நம்பிவிடுவது ஆபத்து ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து… ஆபிரகாம் லிங்கன்
- மக்கள் முன்னிலையில் நண்பனை நாணச் செய்பவன் கொலை செய்யும் குற்றம் செய்பவனே… ஜான்ரே
- நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ மற்றவரின் முதுகில் ஏறிப் போக விரும்பாதே அது உனக்கு பேராபத்து…
- தீயோருடன் இருப்பதை விட தனிமையில் இருப்பது நல்லது. தனிமையில் இருப்பதை விட நல்லோருடன் இருப்பது நல்லது…
- தீய சொல் பேசுவதை விட மௌனமாய் இருப்பது நல்லது…
- எல்லா மக்களையும் சிறிது நாளைக்கு சிறிது மக்களை சிறிது நாட்களுக்கும் முட்டாளாக்க முடியும் ஆனால் எல்லாரையும் எல்லா நாளைக்கு முட்டாளாக்க முடியாது… ஆபிரகாம் லிங்கன்
- பயம் என்பது அறியாமையாலும் சலன புத்தியாலும் ஏற்படுகிறது...
- பயமே மரணம் பயம் இன்மையே வாழ்வு.. சுவாமி விவேகானந்தரன்
- ஒருவன் பேசினான் என்றால் அது முக்கியமில்லை என்ன பேசுகிறான் என்பது தான் முக்கியம்
- நான் மெதுவாக நடப்பவனாக இருக்கலாம் ஆனால் எப்போதும் பின்பக்கமாக நடப்பதில்லை..
- உலகின் பரப்பை கண்டறிவது எளிது ஆனால் உள்ளத்தின் பரப்பை கண்டறிவது அரிது… இது அறிவியல் அறிஞர்கள் கண்ட உண்மை….
- உலகத்தை எழுதி காட்டுவது எளிது ஆனால் உள்ளத்தை எழுதி காட்டுவது அரிது இது கவிஞர்கள் கண்ட உண்மை... டாக்டர் முவ
- பிறருடைய ஆற்றல் அதிகம் தனக்கு இல்லாத ஆற்றலைப் பிறர் பெற்று இருப்பதை ஒப்புக் கொண்டு அதற்காக பாராட்டும் பண்பு மிக மிக மேலானது, எனவே தான் மிகப் பெரும்பாலானோரால் அந்த உயிரி உயரிய பண்பின் வழியே நடக்க முடிவதில்லை... அறிஞர் அண்ணா
- மற்றவர்களால் கடினம் என்று ஒதுக்கப்பட்டதை செய்வதே சக்தி சத்தியம் செய்ய முடியாதவற்றை செய்வதே அறிவு….
- எல்லாம் சில காலம் தான்…
- மனிதனின் மதிப்பு அவனுடைய தங்கமும் வெள்ளியும் அல்ல அவனது நேர்மையும் சக்தியும் மட்டுமே
- பொறுத்திருப்பதன் மூலம் எந்தக் காரியத்தையும் சாதித்துவிடலாம்… தண்ணீரை ஒரு சல்லடையில் கூட எடுத்து செல்ல முடியும் அது உறையும் பொறுத்து இருந்தால்…
- வயதாகியும் கன்னியாய் இருக்கும் பெண் தபாலில் போடாத கடிதம் போன்றவள்…
- தூய மனதிலே தான் அழகு குடியிருக்க முடியும் களங்கம் நிறைந்த உள்ளங்களிலே கற்பனைத்திறனும் அழகும் நிலைத்து நிற்க முடியாது….
- ஒரு மனிதனின் கெட்ட குணங்களை வெறுத்துவிடு ஆனால் மனிதனை வெறுத்து விடாதே…
- புகழையும் புகழ்ச்சியையும் வெறுக்க தெரிந்துகொள் காரணம் தீமையை விளைவிப்பது புகழ் மொழிகளே…..
- பழி வாங்கினால் எதிரிக்கு நிகராகும் ஆனால பழியை அலட்சியம் செய்தால் எதிரியை விட உயர்ந்தவர்களாய் ஆவோம்…
- தவறுகளை ஒத்துக் கொள்ளும் தைரியமும் அவைகளை விரைவில் திருத்திக் கொள்வதும் தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழிகள்...
- மனைவியைத் தேர்ந்தெடுக்கும் போது கிழவனின் பார்வையும் குதிரையை தேர்வு செய்யும்போது இளைஞனின் பார்வையில் வேண்டும்… ஆங்கில பழமொழி
- மனிதத் தன்மையை அடியோடு ஒழித்துவிட்ட ஆத்திகனைவிட நாத்திகனின் மேல்…
- மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி பாய்ந்த நீர் மறுபடியும் மேட்டிற்கு வருவதில்லை இப்படித்தான் காலமும் ஒருமுறை சென்று விட்டால் மறுமுறை திரும்புவதில்லை ஆகவே காலத்தை வீணாக்காதே ஒவ்வொரு நொடியும் பயன்படுத்து…
- துன்பம் வரும்போது நகைக்கும் இதயம் அவன் பெற்ற செல்வத்திலும் சிறந்தது அவன் பெற்ற அறிவிலும் உயர்ந்தது….
- எவ்வளவு கூர்மையான கத்தி ஆனாலும் அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் அதன் கூர்மை குறைந்து விடும் ஆனால் நாக்கு ஒரு விசித்திரமான கத்தி அதை பயன்படுத்த பயன்படுத்த கூர்மை மிகுதியாகும்…
- எந்த தத்துவமாய் இருந்தால் என்ன? அதனை தந்தவர் யாராய் இருந்தால் என்ன? அதனை அப்படியே ஒப்புக் கொள்ளாதே ஏன் என்ற வினாவை எழுப்பி ஆராய்ந்து பார் தயக்கம் வேண்டாம்…
- பிறர் படும் துன்பத்தை கண்டு கடல் அளவு கண்ணீர் விடுபவனை விட பிறன் சிந்தும் ஒரு துளி கண்ணீரை துடைப்பவனே தலை சிறந்தவன்…
- இயற்கை என்பது முதல் கலை என்பது நகல்..
- கல்வி அது நமக்கு இன்ப வாழ்வின் போது ஒரு அணிகலனாய் விளங்கி ஆனந்தம் அடைய செய்கிறது துன்ப வாழ்வின் போது அடைக்கலம் தந்து காக்கிறது…… அரிஸ்டாட்டில்
- உண்மை செயலில் இறங்கும் போது அதற்கு நீதி என்று பெயர் சூட்டப்படுகிறது..
- ஒரு பகலை அதன் இரவிலே பாராட்டுவது தான் முறை ஒரு வாழ்க்கையை அதன் முடிவில் எடை போடுவது தான் நியாயம்…
- மகிழ்ச்சியுள் மகிழ்ச்சி என்பது நாம் ரகசியமாய் புரிந்த ஒரு நல்ல காரியத்தை பிறர் தற்செயலாக கண்டுபிடித்துவிடும் போது நமக்கு ஏற்படுகிறதே அதுதான்..
- மகிழ்ச்சியோடு இருப்பது நமது லட்சியம் ஆனால் அதை எளிதில் அடைந்துவிடலாம் ஆனால் நாம் மற்றவர்களைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சியோடு இருக்க ஆசைபடுகிறோம் அது முடியாது ஏனென்றால் நாம் நினைக்கும் அளவுக்கு அவர்கள் உண்மையில் மகிழ்ச்சியாக இல்லை என்பதே உண்மை…
- அன்பு பணிவு கனிவு போன்ற பண்புகளை தன்னோடு பூட்டி வைத்திருப்பவனே தன் வாழ்வை இனிமையால் நிரப்புபவன்…
- கேட்க செவியும் இன்புற இதயமும் அவர்களுக்கு இருக்கும் காலத்திலேயே பாராட்டுகளை பொழிந்து அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.