Love story (Tamil)

Love story (Tamil)

Love story
படித்துப் பாருங்கள் கண்டிப்பாக பிடிக்கும்

வலி நிறைந்த
இதயத்தில் இருந்து ஒரு கதை...

🌹 *நான் நீயாகவே* 🌹

வெளிஊரில் வேலை பார்க்கும் தன் கணவன் ராஜேஷ் க்கு ப்ரியா call பன்னுகிறாள்...

*PRIYA*:  📲... 📲... 📲..."ஹலோ என்ன செய்ரிங்க😊 ".

*RAJESH*: "என்னம்மா" நீ இன்னும் தூங்கலையா..?"

*PRIYA*:
"ம்ஹூம் "

*RAJESH*:
"Phone switch off பன்னிட்டு தூங்கு"

*PRIYA*:
"தூக்கம் வரலயே"

*RAJESH*:
"ப்ரியா சொன்னா கேற்கனும் இப்பவே லேட் இன்னும் சும்மா ஏன் முழிச்சிகிட்டு இருக்க தூங்கு. காலைள பேசலாம்"

*PRIYA*:
"ராஜேஷ் தூக்கம் வரலடா"

*RAJESH*:
"நீ நல்லா சாப்பிட்டு இருக்க மாட்ட, போய் ஒரு கப் மில்க் போட்டு குடி தூக்கம் தானா
வரும்"

*PRIYA*:
"தூக்கம் வரலடா வேணும்னா நீங்க ஒரு கதை சொல்லுங்க நான் கேட்டுட்டே தூங்குறேன்"

*RAJESH*:
"கதையா, நல்ல வேல பாட்டு பாட
சொல்லல"

*PRIYA*:
"ஏன் நான் சொன்னா பாட்டு படிக்க மாட்டியா"

*RAJESH*:
"விளையாடாத ப்ரியா தூங்கு நான் காலைள வேலைக்கு வேற போகனும்டி"

*PRIYA*:
"முடியாது கதை சொன்னாதான் தூங்குவன்"

*RAJESH*:
"ஐயோ சின்ன பிள்ள போல
அடம்பிடிக்காதடி"

*PRIYA*:
"உங்க குழந்தை என்ட வயித்துல
இருக்கில"

*RAJESH*:
"அதுக்கு...?"

*PRIYA*:
"ஹா...
இந்த நேரம் நான் என்ன சொல்ரனோ, (ஆசைபட்றத) அத நீங்க
நிறைவேற்றனும் அது உங்கட கடமை"

*RAJESH*:
"வேற வேலையில்லை நீ
தூங்காட்டி முழிச்சிகிட்டே இரு
காலையில கடைக்கு போகனும் நான்
தூங்குறேன்."

*PRIYA*:
"அப்படியா... அப்போ இருங்க நான் வாசல்ல போய் நிற்கிறன்"

*RAJESH*:
"ஐயோ வேனாம் வா,வா,வா
நான் கதையே சொல்ரன்"

*PRIYA*:
"உண்மைக்குமா.., கதை சொல்விங்களா..?"

*RAJESH*:
"ஆமாடி, வா"

*PRIYA*:
" ஹ்ம்... அந்த பயம் இருக்கனும் ☺ சொல்லுங்க"

*RAJESH*:
"ஒரு ஊர்ல"

*PRIYA*:
"என்னடா ராஜா ராணி கதையா"

*RAJESH*:
"இல்லடி நீ கதையை கேளு"

*PRIYS*:
"ஹ்ம்ம்ம் சொல்லுங்க சொல்லுங்க..."

*RAJESH*:
"ஒரு தாயும்,மகனும் வாழ்ந்து
வந்தாங்க. அம்மா ரொம்ப கஷ்ட பட்டு
மகன படிக்க வைத்தாங்க
தீடிரென வருத்தம் வந்ததால மகன் படிக்க
முடியாமல் வேலைக்கு போனான்.
அவனுக்கு university கென்டீன் ல
கிளீனர் வேலை கிடைத்தது."

*PRIYA*:
"என்னடா லவ் Story யா"

*RAJESH*:
"நீ கதை கேட்கனுமா இல்லையா..?"

*PRIYA*:
"சரி, சரி, சொல்லுங்க"

*RAJESH*:
"ஒருநாள் பணக்கார வீட்டு பிள்ளைகள்
இருந்த டேபிள கிளீன் செய்யும் போது
ஒரு பெண்ணின் உடம்பில் இவன் கை தவறுதலாக
பட்டுருச்சி, உடனே கோபத்தில் அந்த
பொண்ணு அவன
அறைஞ்சிட்டா
பாவம் அவன் ஒன்னும் சொல்லாமல் மன்னிப்பு கேட்டுட்டு வேலையை
பார்த்தான். ஆனால் அந்த பெண்ணின்
நண்பிக்கு தன்னுடய தோழி நடந்து கொண்ட விதம் தவறாகவே தென்பட்டது..
மதிய நேரம் மரத்தின் நிழலில் அந்த
இளைஞன் புத்தகம் படிப்பதை
பார்த்ததும் நண்பியான அந்த
பெண்ணிற்கு தன் தோழியின்
தவறிற்கு மன்னிப்பு கேட்க
தோன்றியது, பேச வந்த பெண்ணிடம்
விலகியே போனான், இவ்வாறு
அவனை முழுமையாக அறிந்த அந்த
பெண் *கவிதா* அவனை காதலிக்கவே
ஆரம்பித்தாள்.
வாழ்க்கை முழுவதும்
உன்னுடனே இருப்பேன் என இறைவன்
மீது சத்தியம் செய்து இவள் காதலை அவனிடம் கூறினால். இவ்வாறு இருவருக்கும் காதல் வளர்ந்தது, பல்கலைகழக
படிப்பு முடியும் வருடம் கடைசி நாள்
திருமணம் செய்ய
தீர்மானித்தார்கள்.
அதன்படி அன்று மாலை இருவரும்
பஸ்ஸில்
அருகருகே இருந்து உரிமையுடன்
அவன் மார்பில் சாய்ந்தாள்
*கவிதா* இறைவன் விதி பஸ் விபத்தில்
சிக்கியது பலர் இறந்து விட்டனர், பலரும்
மருத்துவமனையில்"

*PRIYA*:
"கடவுளே..... அப்புறம்"

*RAJESH*:
அவன் கண்களை இழந்து விட்டான்.
அவனுக்கு அறுவை சிகிச்சை
முடிந்து கண் பார்வை திரும்பகிடைத்த பின்
தான் தெரியும் *கவிதா*
இறந்து விட்டாள் என்று,
(அலறிதுடித்தான்)
தாதிமார்கள் (Nurse) ஆறுதல் சொன்னார்கள்.
"இறக்கும் தருவாயிலில் உங்களை அவர் (கவிதா)
விசாரித்தார். நீங்கள் கண் பார்வை இழந்த விடயத்தை
சொன்னோம். அப்போது அவர்,
நான் இறந்துவிட்டால் *என்னுடைய கண்களை அவருக்கு* கொடுங்கள்;
அவருக்கு  கண்ணாக காலம்
முழுவதும் அவருடனே இருப்பேன்
என்று, அதனால்தான் கவிதாவுடைய
கண்களையே உங்களுக்கு
வைத்துள்ளோம் என்றனர்.

*PRIYA*:
"என்ன ராஜேஷ் கடைசில கவலை
ஆகிப்போச்சி, என்ன பாவம்
செய்தாங்க,  அவர்கள் இருவரும் நல்லவர்கள்
தானே, கதை எழுதியவனுக்கு இரக்கமே
இல்லையா, போங்க ராஜேஷ் தூக்கமே
போச்சி எனக்கு."
"சரி  காலையிலே
நான் தூங்கிட்டா  கோல் பன்னி எழுப்புங்க"
என கூறி ப்ரியா
தூங்கினாள்..

Phone ஐ cut பன்னிட்டு
முகம் கழுவ பாத்ரூம் சென்ற ராஜேஷ்
கண்ணாடியில் முகத்தை பார்த்தான்.

"கவிதாவின் கண்கள் கலங்கி
இருந்தது" மனதில் கை வைத்து
சொன்னான் காலம் முழுவதும் *"நான் நீ யாகவே....!!!!* 🌹

👉 Story பிடித்திருந்தால் தயவு செய்து மாற்றம் இன்றி மற்றவர்களுக்கும் பகிருங்கள்.....

Thanks to all.
🌹🌹🌹  🌹🌹🌹

Post a Comment

Previous Post Next Post

Popular Products

WhatsApp stories

YouTube marketing