❤️
அலைபோல் திரிந்திடும் மனதை...
கரைபோற் தடுத்திடும் உணர்வே…
கடல்போல் ரகசியம் இதுவே…
கேட்பதை கொடுத்திடும் தானே… --- P.G.Durairaj
தேடியவிழிகள் அவள்வரும் பாதையை நோக்கி நகர்ந்தன
தன்னுயிர் நீங்குதலை கண்டதில்லை யாருமிங்கே......
உன்னுள்ளே ஆருயிராய் நானிருந்தும் நானிருந்தும்......
நீ-மரித்து என்னுயிரை உடனெடுத்துச் சென்றாய்......
உயிரற்ற நடைபிணமாய் எனைஉலவச் செய்தாய்.......
இருளை நீக்கி வெளிச்சத்தை தரும் மெழுகுவர்த்தி போல என்னில் காதல் வெளிச்சத்தை உண்டாக்கினாய்...
நீ தந்த வெளிச்சத்தில் நான் உருகினேன்...
ஆனால் இவ்வளவு விரைவில் தீர்ந்து போய் மறுபடி இருளிலேயே விட்டு விடுவாய் என எதிர்பார்க்கவில்லை...
#எல்லாம் சில காலம்
உன்னை நினைக்கவே கூடாது
என்று நினைக்கும் ஒவ்வொரு
நொடியும்.....
உன்னையேதான் நினைக்க
தோணுதடி....
என்னை நான் காண்கிறேன் அவள் என்னும்
கண்ணாடி முன் நின்று....!
அழகான பெண்ணை அன்பாக பார்ப்பது காதல் இல்லை
அன்பான பெண்ணை அழகாக பார்ப்பதுதான் காதல்
அவள் சிரிப்பில் சிதறுவது ஓசைகள்
அல்ல என் இதயத்துகள்கள்…
உன் நினைவுகளே என் வாழ்க்கை என்றான பிறகு நீ அருகில் இருந்தாலென்ன தொலைவில் இருந்தாலென்ன....
❤️உன் பிரிவில்
ஊமையான என்
மொழிகள்
கவிதையாக
உருவெடுக்கின்றேன்…
இமையோடுதான் உறங்கங்களா???
உன்னால்,
உறங்காமலே
நானில்லையா???
❤️
உண் கைகள் கோர்த்த பிறகு தான் தெரிந்து கொண்டேன் உண் கைகள் கூட காதல் செய்யும் என்று…
❤️உனக்கும் எனக்கும் இடையில்
ஒன்றுமில்லை என்பதை விட..!
என்னை நீ வெறுப்பது கூட
எனக்கு ஒரு சுகம் தான்..!
ஏனெனில்,
அதற்குக் கூட நீ என்னை
நினைத்தால் தான் முடியும்..!
❤️
காற்று தேவையில்லையடி......??
உன் காதல் போதுமடடி......??
நான்..
சுவாசிக்க.......!!
இந்ந உலகம் தேவையில்லையடி...?
உன் அனைப்பு போதுமடி.....?
நான்...
நேசிக்க........!!
என் நேற்று தேவையில்லையடி.....?
நம் நாளை போதுமடி....?
நான்...
யோசிக்க.......!!
இனி எதுவும் தேவையில்லையடி.....?
உன் இதயம் போதுமடி...??
நான்...
வசிக்க............!!
❤️
பார்வையாலே
கவிதை பேசும்
உன் கண்களுக்கு போட்டியாய்...
என் உயிர் எழுத்துக்களில் மெய்யாய் தேடிய சொற்களை ஆராய்ச்சி செய்து தேர்ந்தெடுத்து,
உனக்காக உருக்கமாக ஒரேயொரு கவிதையாவது வடிப்பேன்
என் ஆயுள் முடிவதற்குள்...
மலர்கள் தான் மட்டும் அழகென்று தலை
நிமிர்ந்தது.
உன்னை காணும் வரையில்!
பறவைகளும் தன் ஓசைேய இனிமையென
கருதியது.
உன் குரல் கேட்கும் வரை!
நதிகளும் தன் நலிணமே சிறந்ததென
நினைத்தது.
உன் அசைவுகளை
காணும் வரை!
இயற்கையே உன்னைக் கண்டு வியக்கும்
போது. நான் மட்டுமென்ன!
நானும் வியக்கின்றேன் உன்னுடைய அன்பால்!
அவளுடன் சேர்ந்திருந்தால்
அன்றே முடிந்திருக்கும்
என் காதல்.
அவள்
என்னைவிட்டு
பிரிந்ததால்தான்
இன்னும் நீளுகின்றது
என் காதல்
❤️
உன் விழியில் இடரி விழுந்ததென்னடி
அவ்வளவு பெரிய பிழையா?
என்னை அனுதினமும் சிறைப்பிடிக்கின்றாய் - அதே கண்களைக்கொண்டு!!!
❤️
உன் பிள்ளைக்கும்
என் பெயரைத்தான்
வைத்திருக்கிறாய்
என்றறிந்த போதுதான்
உணர்ந்துகொண்டேன்
என் காதல்
தோற்கவில்லையென்று
எவ்வளவு பலம் வாய்ந்தவனாக இருந்தாலும், ஒவ்வொரு ஆணும் தோற்றுத்தான் போக வேண்டியிருக்கிறது, பலமற்ற ஏதோ ஒரு பெண்ணிடம்......!
❤️#இரண்டடி நகர்ந்த நேரம்,
வெகு தொலைவாய் இதயம் எண்ணும்;
ஓயாமல் பேசிய இதழும்,
மௌன ஆடையை அரிதாய் அணியும்,
நிழலாய் நடந்த காலும்,
மண் சிலையாய் உறைந்து போகும்;
பார்த்து பூரித்த விழியும்,
உலகம் தன்னை மறந்து கலங்கும்;
இவை அனைத்தும் நிகழும்,
நீ இரண்டடி நகர்ந்த நேரம்......
❤️
உன்
பெயரை கடற்கரையில் எழுதி
அழகுபார்த்தேன்...
கடல் அலைகள் வந்து
எடுத்து சென்றன...
ஏனோ தடுக்க மனமில்லை
உண்மை தானே
முத்துக்கள் கடலில் தானே
இருக்கனும்
நீ
என்னை விட்டு பிரிந்து ...
பலகாலங்கள் ஆகிவிட்டது ...
பலமுறை என் இதயத்துக்கு ...
சொல்லிவிட்டேன் ....
நம்பமாட்டேன் என்கிறது ...
என் இதயம் .....!!!
ஒருமுறை ...
நீ என் இதயத்தில் இருந்த ....
இடத்துக்கு வந்து ஆறுதல் ....
சொல்லிவிட்டு போவாயா ....?
அன்பே நான்
என்னை காதலிக்கிறேன்
என்னுள் இருக்கும்
உன்னை காதலிக்கிறேன்
நம்முள் இருக்கும்
காதலை காதலிக்கிறேன்.
அதனாலேயே என்னவோ
நான்- காதலையே காதலிக்கிறேன்.
இத்தனை நாளும் எத்துணை வார்த்தைகள் பேசினாலும் அத்துணை வார்த்தைகளும் பிழையுடன்தான் பேசியிருப்பேன் அம்மா என்ற வார்த்தையை தவிர்த்து உன் பெயரை உச்சரிக்கும் வரை..
❤️என் கனவில் தினம்தோறும்
மிதப்பவன் நீ..!
என் நெஞ்சில் வியாபித்து
இருப்பவன் நீ..!
என் உணர்வுகளை எல்லாம் ஆட்டிப்
படைப்பவன் நீ ..!
இப்படி நான் நானாக இல்லாமல்
நீயாக இருக்கும்போது
நீ மட்டும் எப்படி நீயாக இருக்கிறாய்..!
நீ என்னை
விலக
ஆயிரம் காரணம்
சொல்லலாம்..
ஆனால் நான் உன்னை
நேசிக்க ஒரேஒரு காரணம்
மட்டுமே
சொல்வேன்...
நான்...
உயிராய்...
"உன்னை மட்டும் நேசிக்கிறேனடா".
என் விழிகளிள் நுழைந்து
இதயத்தில் புகுந்து
என் தூக்கம் திருடிய திருடா
ஏன் என தெறியாமலே
என்னையே நான் மறந்தேன்
என்னை எனக்குள்ளே தேடுகின்றேன்
பின்பு தான் கண்டேன்
என்னை திருடிய உன்னில்
இன்று இரவே உனக்கு சொல்கிறேன்
கேள்
நாம் இமை மூடுகையில்
என் இதய ஓசை நிற்க
வேண்டும்
அவன் இல்லா கனவும்
வேண்டாம்
அவன் இல்லா இரவும்
வேண்டாம்
❤️
நீ யாருக்காக அழுது அழுது இறந்து கொண்டிருக்கிறாயோ..
அவர்கள் வேறு யாருக்காகவோ சிரித்து சிரித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
காதலை சொல்ல உதடுகள் வேண்டும்
என நினைத்திருந்தேன். கண்ணீர்த்துளிகளை
கண்டபிறகு தெரிந்துகொண்டேன்....
காதலை சொல்ல கண்ணில் ஈரமிருந்தால் போதுமென்று....
நீ நடந்து செல்லும் பாதையில் தினம் தினம் நடைபிணமாக வலம் வருகிறேன் என்றாவது ஒருநாள் உன் ஓரக்கண்ணால் பார்த்து உயிர் தருவாய் என்று
❤️பொய்யாய் இருந்தாலும்..
பேரழகி நீ தான் என்று சொல்லும் சொல்லில்
சொக்கி போகிறது
பெண்களின் காதல்…
கரைசேரவும் முடியாமல்
ஆழம் பார்க்கவும் முடியாமல்
கானல் நீரானது -என்
காதல்
என் காதலை மட்டும் சுமந்து கொள்
போதும்
உன்னை நான் காலமெல்லாம் சுமப்பேன்
ஒரு தாயாக ..!!!!
கல்லுக்குள் இருக்கும் தேரையை கூட கண்டுபிடித்து விடலாம் ஆனால் பெண்ணின் மனதில் உள்ள காதலை மட்டும் கண்டுபிடிப்பது அரிது
❤️உண்மையில் நீ கொள்ளைக்காரன் தான்...
பட்டப்பகலில் இத்தனை பேரை சாட்சியாக வைத்துக்கொண்டு
வெறும் பார்வையாலே கொள்ளையடிக்கிறாயே என்னை!!!
❤️
தொலைந்து போன நீ...
தொலைவில் இருந்தாலும்...
தொலைக்காமலே
சேர்த்து சேர்த்து வைக்கிறேன் உன் நினைவுகளை!!!
❤️
யாரோடு வாழ முடியுமோ அவரோடு வாழ்வது அல்ல வாழ்க்கை
யார் இன்றி வாழ முடியாதோ அவரோடு வாழ்வதுதான் வாழ்க்கை......
எவ்வளவு மறைத்தும் வெளிப்படுத்திவிடுகிறது
என் கண்ணீர் துளிகள்
அவன் மீது
நான் வைத்திருக்கும்
ஆழமான நேசத்தை!!!
❤️
இன்னும்
நேசித்துக்கொண்டு தான்
இருக்கிறேன்...
நீ என்னை
நேசிப்பதாக
நாடகமாடிய
அந்த
சுகமான
"மணித்துளிகளை
பொய்யாக நேசிப்பவர்கள் கூட சந்தோஷமாக இருக்கின்றனர். உண்மையாக நேசிப்பவர்கள் தான் அதிகம் காயப்படுகின்றனர்..
❤️ஒவ்வொரு நொடியும் உன்னை நான் நினைத்து கொண்டிருக்கிறேன் ...
ஒரு நொடியாவது என்னை நீ நினைப்பாயா என்று....!
ஆயிரம் உறவுகள் என் அருகில் இருந்தும்
என் மனம் உன் அருகில் மட்டுமே இருந்தது ,,,
ஆயிரம் வார்த்தைகள் என்னுள் இருந்தும்
என் வார்த்தை உன்னை பற்றி மட்டுமே பேசியது,,,
இந்த ஒரு ஜென்மம் போதாது,,,,
உன்மேல் அன்புகாட்ட,,,
என்னுள் இன்னொருவனாக நீ நுழைந்து விட்டாய்,,
உன்னை விலகவும் முடியாது,,,
பிரியவும் முடியாது ,,,
❤️
அன்று நான் காத்திருந்தேன்
நீ எப்போது வருவாயென்று.,,
நேற்று காத்திருந்தேன்
நீ வருவாயென்று.,,
இன்று காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக.,,
நாளை காத்திருப்பேன்
நீ வரவேண்டுமென்று.,,
என்றும் காத்திருப்பேன்
உனக்காக.,,
நினைவுகளை தந்தாய் இதயம் வலிக்கிறது...
கனவுகளை தந்தாய் கண்கள் வலிக்கிறது... பிரிவுகளை தந்தாய் உயிர் வலிக்கிறது... முகம் காட்டாமல் மறைக்கிறாய் என் உயிரே போகிறது...!!
உன் காதலில் கிறங்கச் செய்த பின்
என் நினைவுகளில் நிறைந்து நின்றாய்
என் உறவுகளை மறக்கச் செய்தாய்
என் உறக்கங்களை பறித்துச் சென்றாய்
நீயே யென்னுலகமென்றே எண்ணிடச் செய்தாய் -
இன்னுமெனை என் செய்வதாய் உத்தேசம் ?
❤️
ஏனென்று புரியாமல் என்னையும்
அறியாமல் எதற்கென தெரியாமல்
தினமும் எழுதுகிறேன் கவிதைகளை..!!
என் கவிதைகள் அன்பின் உயிரோட்டமாக இருந்தாலும் அர்த்தமற்ற பதராக
இருந்தாலும் அதன் காரணம் உன்மேல் நான் கொண்ட காதல் மட்டுமே..!!
என்றேனும் என் கவிதைகளை நீ வாசிக்க கூடும் அன்று உன் விழித்தீண்டி உயிர்பெற்றெழும் என் எழுத்துக்கள்
உன் கன்னங்களை முத்தமிடும் காதலுடன் என்ற நம்பிக்கையிலேயே தினமும்
எழுதுகிறேன்..!!
எந்த வானத்திலும்
சாத்தியப்படாத
ஒர் நிலவு
என்னருகில் உலவிக்கொண்டிருக்கிறது;
உன்னுருவில்
உன் கண்களோடு
என் கண்களிட்ட
போரில்
தோற்றுப்போனது
என் இதயம்...!
உந்தன் ஓரப்பார்வைக்கு
மட்டும்
ஓராயிரம் அர்த்தத்தை காட்டுகிறது
எந்தன் காதல் அகராதி!!!
நீ!
என்னைக் கடந்து
செல்லவில்லை....!
என் இதயத்தை
கடத்திச்
சென்றுவிட்டாய்..!
என் கண்களால் உனை கைது செய்தேன் என்கிறாய்
ஆனால்
உன்னிடம் சிறை பட்டு நிற்பவள் நானல்லவோ ?
உன்னோடு
பேசிக்கொண்டு
இருக்கும் போது
கடிகாரத்தை
பார்பதில்லை..
உன்னோடு
பேசுவதற்காக
காத்திருக்கும் போது
கடிகாரத்தை தவிற
வேறு எதையுமே
பார்ப்பதில்லை..
பெண்கள்
எதிரும் புதிருமானவர்கள்தான்;
எதிரே வரும்போதெல்லாம்
சிரிக்கிறாள்,
காதலைச் சொல்லப்
போனால்
புதிராகவே இருக்கிறாள்…
நீ என்னிடம் பேசும் சமயங்களில்...
உன் கண்களை மட்டும் என்னிடம் காட்டாதே,
பேச்சு மட்டுமல்ல
சில சமயம் மூச்சும் வரமறுக்கிறது
அன்பே!!!
தவறேதும்
செய்யாமல்...
தண்டனையாய்
சிறை செல்லவும்
தயங்க
மாட்டேன்...
நான் அடைக்க
படுவது உன்
இதயமாக
இருக்கும்
பட்சத்தில்..
என்னுள் நீ
உன்னில் நான்
என்றெல்லாம்
நீ சொல்ல
நான்கேட்ட
காலம் மாறி
நான் யாரோ
நீ யாரோ
என நீ கேட்ட
குரல் கேட்டு
மனதுஅழுததடீ
என் உயிரே
காதலை போல
வலியும் இல்லை
காதலை போல
சுகமும் இல்லை
கனவுகள்
தந்த காதல்
ஏனோ எனக்கு
வாழ்க்கையே தர
மறுத்து விட்டது
சாதிக்கப் பிறந்தேனா..
இல்லை உன்னை சந்திக்கப்
பிறந்தேனா.. என்பது கேள்விக்குறி!
உன்னை சந்திப்பதே எனது சாதனை என்பது முற்றுப்புள்ளி!!
காதலில் மட்டும்
தான்
வெற்றிக்கும்
தோல்விக்கும்
ஒரே பரிசு...
*"கவிதை!"*
உன் நினைவுகளை சுமந்து உன்னோடு உன் மனசில் நான் எப்போதும் இருப்பேனடா உன்னை நேசித்த காதலியாக
❤️அடைமழையும் தன் தோல்வியை
ஒப்புக் கொண்டது...
நீ பற்ற வைத்த காதல் தீயை அணைக்க முடியாமல்!!!
அவன்
எதைத் தேடினாலும்
அது நானாக இருக்க வேண்டும் .
அவன் தேடும்
எல்லைக்குள்ளேயே
நான் தொலைய வேண்டும் .
பொழுது போக்கிற்க்காக பாத்த உன்னை
இப்போது பொழுது போவது கூட தெரியாமல் பார்த்து கொண்டு இருக்கிறேன்.
நீ இடம்பெறும்போது
என் கவிதைகள் மட்டுமல்ல நானும் உயிர்பெற்று அர்த்தமாகிறேன்!!!
உன் பார்வையில் தொலைந்தது நான் மட்டும் இல்லை...
என் கோபங்களும் தான்…
கண்கள் திறக்கும் வரை தான் கனவு நீடிக்கும்.ஆனால் என் கண்கள் மூடும் வரை உன் நினைவு நீடிக்கும்..
❤️உறவுகளை
எல்லாம்
உதறி விட்டு..
ஒரு உயிரை
மட்டும் தேட
வைப்பதுதான்
காதல்..
துடிக்க மட்டுமே தெரிந்த என் இதயத்துக்கு தவிக்கவும் கற்று கொடுத்தது உன் நினனவுகள் மட்டுமே
ஊரெல்லாம்
உறங்கிபோய்
கிடைக்கின்றது...
தூங்காமல் என் மனம்
தூங்கவிடாமல் உன் முகம்…
ஆயிரம் வலிகளை
தந்து
சென்றாலும்
நினைவுகள்
என்பவை
சுகமானது
தான்…
வெறுமையாக இருந்த
இதயம் இன்று
இடம் இல்லாமல்
மொத்தமாய் நிரம்பியது
உன் நினைவால் தானே...
கண்ணீரைகூட இன்பமாய்
ஏற்றேன்
அவை நீ பரிசாக
கொடுத்துச்சென்றவை
என்பதனால்....!
ஆயிரம் தடவை உன்னிடம் சன்டை போட்டாலும்...
உன்னிடம் பேசாமல் இருந்து விட்டு ஒவ்வொருமுறை
சமதானம்ஆகும் போதும்
புதிதாய் காதலிப்தாய் ஓர் உணர்வு.... தோன்றுவது ஏனோ...?
சுட்டு விரல்கள் கோர்க்கும் தருணம், விழியோடு முகம் பார்க்க ஆசை;
மழைச் சாரல் தூறும் தூரம்,
அவளோடு நடை போட ஆசை;
தடுக்கி விழுந்த நேரம்,
உடலோடு தாங்கி பிடிக்க ஆசை;
காதல் உணர்ந்த போதும்,
உயிரோடு கட்டி அணைக்க ஆசை........
❤️❤️
நிலவுக்கும்
வியர்க்குமென்று
உன் முகம் பார்த்தே
உணர்ந்தேனடி
நான் பொய்யாக
புனைந்தாலும்
அதை மெய்யாக்க
முயன்றாயோ
இத்தனை பிரகாசம்
உன் முகத்தில்
❤️❤️
பூட்டிவைத்த இதயத்தின் பூட்டையே காணவில்லை அன்பே உன்னால்...
திருடிய என் இதயத்தை ஒருமுறை புரட்டிபோட்டு வாசித்துதான் பாரேன்...
என் உதடுகள் சொல்லாததை
அது சொல்லும்...
என் மௌனம்கூட மெல்ல பேசும்...
என் முகவரிக்கு தவறாமல் வந்து விழும் உந்தன் விழிகடிதங்களால்,
நாள்தோறும் கூடுகிறது
உன் இம்சையின் யுத்தங்கள்...
என்று...என்று...
நான் காத்திருக்கையில்,
இன்று...இன்று...
உன் பார்வை பத்திரம் எழுதி
பதிவு செய்கிறது இது காதல்தான் என்று...
சம்மதம் என்னும் பதிலை எப்படி சொல்வேன் துணிந்து...
வேண்டுமானால் கவிதையால் சொல்லட்டுமா???
❤️❤️
இனி...
நீ வேண்டும் இனி...
கனவுகளும் விழிக்கட்டும் இனி...
கண்கள் தேடும் இடமெல்லாம் நீ வேண்டும் இனி...
நேரங்கள் உறையட்டும் இனி...
நேரங்காலம் பாராமல் உருக நீ வேண்டும் இனி...
பகல்களும் தூங்கட்டும் இனி...
பக்கத்தில் எந்நேரமும் நீ வேண்டும் இனி...
நாணமும் கதைசொல்லட்டும் இனி...
நான் சிணுங்கும் போதெல்லாம் நீ வேண்டும் இனி...
பேராசைகள்மட்டும் நிறைவேறட்டும் இனி...
பேரம்பேசி என்னுயிரை வாங்க நீ வேண்டும் இனி...
வானவில்லும் தோரணமாகட்டும் இனி...
வாடி நானும் போகாமலிருக்க நீ வேண்டும் இனி...
தற்காலிகமெல்லாம் தங்கிவிடட்டும் இனி...
தள்ளி போகாமல் நிரந்தரமாய் நீ வேண்டும் இனி...
நிலவும் தேய்ந்தேகிடக்கட்டும் இனி...
நித்தமும் வளர்பிறையாய் நீ வேண்டும் இனி...
உயிரும் உயிலெழுதட்டும் இனி...
உணர்வாய் என்னில் புதைய நீ வேண்டும் இனி...
எரிக்கின்றதீயும் குளிரட்டும் இனி...
என் கவிதையின் புலம்பல்களில் நீ வேண்டும் இனி...
மூச்சுக்காற்றும் முடங்கட்டும் இனி...
மூன்றுமுடிச்சிட்டு எனை அலங்கரிக்க நீ வேண்டும் இனி...
அன்பே,
உன் பேரும் என் பேரும் மட்டுமே தனி தனி...
உன்னில் வாழ பிறவிகள் ஏழெடுப்பேன் நான் இனி...
#கவிதையில்_கற்பனை_மட்டுமே!!!
இன்று காதலனாய் இருக்கும்
என் நாளைய கணவனுக்கு..
தினமும்
அவனுக்கு முன் எழுந்து
அவன் தூங்கும் அழகை ரசிக்க
ஆசை!
தினமும் மலர் சூடி
என் நெற்றியில்
அவன் இதழ் சேர்க்க ஆசை!
அனைவரும் இருக்கும் நேரத்தில்
கள்ளவனாய் அவன் என் இடைக்கில்ல ஆசை!
யாரும் இல்லா நேரத்தில் முத்தத்தில்
அவனை நனைக்க ஆசை!
குழந்தையாய் அவன் செய்யும்
தவறுகளை ரசிக்க ஆசை!
யாரும் இல்லா சாலையில் அவன்
கைபிடித்து நடக்க ஆசை!
முதன் முதலில் அவன் வாங்கும்
வாகனத்தில் அவனோடு வெகுதுரம்
செல்ல ஆசை!
மழை நேரத்தில் ஒரு குடைக்குள்
அவனுடன் இருக்க ஆசை!
மழையில் நனைந்த அவன் தலையை
என் புடவை நுனி கொண்டு
துடைக்க ஆசை!
அவன் உயிர் சுமக்கும் என்னை
அன்று அவன் கண்ணுக்குள் வைத்து
பார்க்க ஆசை!
அவன் உயிர் பிறந்த பின்பும்
அவன் முகம் முதல் பார்க்க ஆசை!
இப்படியே 60 ஆண்டு காலம்
அவனோடு நான் வாழ
ஆசை!
60 ஆன பின்பும் அவன் முகத்தில்
விழுந்த ரேகையையும்
கன்னத்தில் விழுந்த குழியையும்
மூக்கு கண்ணாடி போட்டு ரசிக்க ஆசை!
உயிர் பிரியும் வேலையில்
அவன் முகம் பார்த்து
அவன் மடியில் உயிர் பிரிய ஆசை..!!
❤️❤️
நீ.....பேசாத ..!
வார்த்தைகளை i
எல்லாம் ஒவ்வொன்றாய்
கோர்த்துகொண்டு
இருக்கிறேன்...!
இன்றாவது ஒரு
காதல் கவிதை
வேண்டுமென்று...?
உன் வார்தைகள்தான்
விரதமென்றால் என்ன...?
சிறு விழிப்பார்வைதான்
கொஞ்சம் கடனாக தா...!
அவ்வெரு இமைகள்தரும்
இடைவெளியில்..
மீட்டிக்கொள்கிறேன்
எனக்கான கவிதைகளை...!
இரண்டொரு வார்த்தையேனும்
பேசி விடு பெண்ணே
இருளாய் போன வாழ்கையில்
உன் வார்த்தைகள் மட்டுமே
வெளிச்சம் தருகிறது.
உன் காதல் மழையில் நனைகின்ற மொட்டு நான்
நீ என்னை தீண்டும்வரை மலரமாட்டேன் !!!
வாழ்க்கை ஒரு
நாவல்..
அங்கே நான்
வாசித்து
பார்த்ததில்
மறக்க
முடியாத
வரிகளாய்
நீ..!
இரவின் மடியில்
பாடல்களோடு - உன்
இறகுப் பிடிக்குள்
உறங்கவே
மனம் ஏங்குகிறது
உன் மௌனங்கள் என்னுள்ளே விதைத்திடும் வலிகளுக்கு இரு சாட்சிகள் உண்டென்றால் அவை என் விழிகள் வடித்திடும் கண்ணீர் துளிகளும் என் விரல்கள் வரைந்திடும் கவிதை வரிகளும் மட்டுமே !
❤️உனக்காக துடிக்கும் என் இதயத்தின் சத்தம்தான் கேட்கவில்லை என்றுவிட்டாய்...
உன்னை மட்டுமே காண தவம் செய்து வந்த என் கண்களில் கண்ணீரோடு வழியும் காதலுமா தெரியவில்லை???
அன்பே ! நீ
பார்த்து நின்றால்
சூரியன் கூட
எரிவதை மறக்கும்....!
சிலையே ! நீ
சிரித்துச் சென்ரால்
மடிந்த மலர்களும்
மறுபடி உயிர்க்கும்....!
பெண்ணே ! நீ
பேசிச் சென்றால்
சங்கீதம் உன்னிடம்
சரிகம கற்க்கும்....!
உயிரே ! நீ
உன் பெயறை தந்தால்
ஒற்றை சொல்லில்
ஒரு கவிதை காடைக்கும்....!
கண்ணே ! உன்
கால்கள் பட்டால்
கடற்கறை மணலும்
கல்வெட்டாகும்....!
என் இதயமே ! நீ
உன் இதயம் தந்தால்
பூமியில் எனக்காய்
புதிய சொர்க்கம் பிறக்கும்.......
கருமேகம் சுமந்து வரும்
மழைக்காகக் காத்திருக்கும் உழவனாய்..
உலாவரும் உன்
பார்வைக்காக ஏங்குகிறேன்..
மலைக்காற்று பட்டும்
குளிராத நீ..
என் குரலுக்கு
செவிசாய்க்கிறாய்....
ஊரெல்லாம் வறட்சியில்
வாடுகையில் நான் மட்டும்
உன் நினைவில்
நனைகிறேன்...
❤️
நான் இங்கு இ௫க்கிறேன்
௭ங்கே போகிறாய் நீ வா..
❤️
௭ன்னால் அறைகள் நிரம்பிய
கட்டிடும் கட்டு முடியும்
அதை வீடாக மாற்ற
நீ வேண்டும் வா..
❤️
௭ன்னால் வயிறு நிரம்ப
௨ணவு ௨ண்ண முடியும்
மனம் நிறைய அதை
பரிமாற நீ வேண்டும் வா..
❤️
௭ன்னால் ரொம்ப தூரம்
நடுக்க முடியும்
ரொம்ப நேரம் நடுக்க
நீ வேண்டும் வா..
❤️
௭ன்னால் அழகான ௨டைகள் ௨டுத்த முடியும்
அவைகள் ௭ல்லாம்
௭னக்கு அழகென்று சொல்ல
நீ வேண்டும் வா..
❤️
௭ன்னால் விடிந்தும் ௨றங்க முடியும்
விடிந்த ௨டுன் கடிந்து
அன்பாய் ௭ழுப்ப
நீ வேண்டும் வா..
❤️
௭ன்னுள் வ௫ம் கலைப்பு
௭ன்னால் போக்கிக்கொள்ள
முடியும்
அவைகள் ௭ன்னுள் வராமல்
தடுக்க
நீ வேண்டும் வா..
❤️
௭ன்னால் மகிழ்ச்சியின் ௭ல்லைவரை செல்ல முடியும்
௨ள்ளே செல்ல
நீ வேண்டும் வா..
❤️
௭ன்னால் 100 ஆண்டுகள்
இ௫க்க முடியும்
ஆனால் வாழ
நீ வேண்டும வா..
❤️
௭ன்னால் யார்மீதும்
அன்பு செலுத்த முடியும்
ஆனால் காதலிக்க
நீ வேண்டும் வா..
❤️
௭ன்னால் கவிதைகளில் ௨ன்னை வர்ணிக்க முடியும்
ஆனால்
கவிதைகள் ௨ண்மை ௭ன்று
நி௫பிக்க
நீ வேண்டும் வா.
❤️
இ௫க்கும் கற்பனைகளை
சுமக்க முடியவில்லை
கற்பனைகளை கண்முன்
கொண்டு வந்து சுமையி௫க்க
நீ வேண்டும் வா..
#நான் வேண்டும் என்றும்
உன் கண்களின் காட்சிகளாக மட்டுமல்ல
உன் கண்களின் கண்மணிகளாக
நான் வேண்டும் என்றும்
உன் உயிரின் மூச்சாக மட்டுமல்ல
உன் ஊனின் உணர்வாக
நான் வேண்டும் என்றும்
உன் கைகளணைத்திடும் தேகமாக மட்டுமல்ல
உன் கரத்தோடு இணைந்தே இருந்திடும் கைரேகைகளாக
நான் வேண்டும் என்றும்
உன் காதல் ஜனித்தெழுந்திட்ட கருவறையாக மட்டுமல்ல
உன் காதல் மரித்துறங்கிடும் கல்லறையாகவும்
நான் மட்டுமே வேண்டும்
என்றும் என்றென்றும் !
ஆயிரம் பேர் பல மணி நேரம் பேசினாலும், நீ பேசும் அந்த சில நிமிடங்களுக்கு தான் என் மனது ஏங்கித் தவிக்கிறது...
❤️நமக்கு புடிச்சவங்கிட்ட இருந்து
💌Message வரும்போது📩...
நம்பல அறியாமலே...
ஒரு சிரிப்பு வரும்...
😍அந்த சிரிப்பு😍
ஒரு தனி சுகம் தான்...
எனக்கு Message பண்ண மறந்துறாத..
❤️
ஒவ்வொரு தடவை தோற்கும் போதும் என் மனதில் தோன்றுவது ஒன்றுதான் நாம் இன்னும் பெரிய செயல்களில் வெற்றி பெறப் போகிறோம்…
தோற்று நிற்கிறேன்
இது ஒன்றும் புதிதல்ல
புதிய முயற்சியின் தொடக்கம்…
❤️பிடித்த ஒருவரின்
அழைப்பிற்காக காத்திருக்கும் வலி, உண்மையாய் நேசித்த சில உள்ளங்களுக்கு மட்டுமே புரியும்…
என் வலியைப் புரிந்த உனக்காக காத்திருக்கிறேன் அன்பே...